Title of the document
HEAVY RAIN

தமிழகத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுக்க தற்போது பரவாலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாக அடைந்து வருகிறது.


இன்னும் இரண்டு நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் இப்போதைக்கு பருவமழை விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

  • திருவாரூர், 
  • புதுக்கோட்டை , 
  • தஞ்சாவூர், 
  • மன்னார்குடி, 
  • நாகையில் 
நாளை மாலை வரை கனமழை பெய்யும்.


  • பட்டுக்கோட்டை

அதேபோல் பட்டுக்கோட்டையில் தீவிரமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூரிலும் குமரியிலும் காற்று சீற்றமாக காணப்படும். குமரியில் நாளை 11 செமீ மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • கோவை மாவட்டம்
  • கோவை, 
  • திருப்பூர், 
  • பொள்ளாச்சி 
பகுதியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும். நீலகிரியில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரத்தில் 24 மணி நேரமாக பெய்து வரும் தொடர்ந்து நீடிக்கும்.


கடல் எப்படி

இந்த பருவமழையால் ராமநாதபுரம் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது ராமநாதபுரத்தில் அதீத வேகத்தில் காற்று வீசும். இதனால் அங்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post