Title of the document
images%252871%2529

வரவேற்போம் வளம்நிறை புத்தாண்டை...
வீட்டு நாட்காட்டி தன் கடைசி அத்யாயத்தை எழுதிக்கிழித்து பரிட்சை அட்டையாய் மாறிக்கிடக்கிறது
இறுதியில் நினைத்துப்பார்க்க ஏதுமில்லாது கழிந்தாலும் 
பல கணங்கள் ரணங்களோடும்
சில மகிழ்வின் துளிகளையும் தெளித்தே தான் சென்றிருக்கிறது இவ்வாண்டு
காலத்தின் வயது முதிர முதிர பக்குவப்படுகிறோம்
நாட்கள் நகர நகர பயந்தே பயணப்படுகிறோம்
மீளவே இனி உதிக்காத அந்த காலச்சூரியனை நன்றியோடு வழியனுப்பி
புதிதாய் நாட்பூக்களோடு வருகிற புத்தாண்டுக்கு வாசல் திறந்து வைப்போம்
இதயத்தில் ஒளித்தே வைத்திருக்கிற அன்பினை எடுத்து இனிமுதலேனும் இன்னமுதென பகிர்ந்தளிப்போம்
சாதிச்சாயத்தை எல்லாம் வழித்தெடுத்து இனி வெள்ளையாய் சமத்துவச்சாந்தினை அனைவரும் பூசிக்கொள்வோம்
கணினியோ கட்செவியோ முகநூலோ அளவோடு அவைகளை நம் வாழ்வின் வண்டியிலேற்றி உடனிருக்கும் உறவுகளை நெஞ்சிலேற்றி அடுத்தவீடு எதிர்வீடென நட்பினை  விசாலமாக்குவோம்
வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்கிற வாழ்விலும் தூய்மையைத் துணை கொள்வோம்
கவுரவமென்பது இயற்கையை நசுக்குவதில் நீளாது
நேசிப்பதில் நீளச்செய்ய நெகிழியைத் தவிர்த்திருப்போம்
துணிப்பையைத் தூக்கிச்சுற்றுவோம்
மிச்ச உயிருக்கும் எச்சமாகவேனும் சில மிச்சம் வைத்து அதன்பின் உச்சம் காண்போம்
புகையும் போதையும் 
ஆள்பவர் அழிக்க காத்திராது
சுயம்புகளாய் முடிவெடுத்து நலம் காப்போம்
முடிந்தவரை பிறன்வலி அறியும் வழிதனில் நாட்களை நகர்த்துவோம்
இப்பிறவிக்கில்லை மறுபிறவி இருக்கும் வரை நல்லன செய்து வாழ்வோம்
இப்படி இருப்போமெனில் நாம் கிழித்தெறியப்போகிற ஒவ்வொரு நாளும் ஆனந்த பூக்களை அள்ளி வந்து கொட்டும்..
அனைவருக்கும்,,
 இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post