Title of the document


நண்பர்களே!

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவரும் நமக்கு அஞ்சல் வாக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணுகை மையங்களில் பெரும்பாலும். அஞ்சல் வாக்குகள் செல்லாமல் போய்விடுவதை நாம் அறிவோம்.

அஞ்சல் வாக்கு நடைமுறையில் நாம் செய்யும் சிறு பிழையும் அல்லது செய்யத்தவறிய சிறு செயலும் வாக்கினை செல்லாததாக்கிவிடும்.

எனவே, கவனமாக தங்கள் வாக்கினை பதிவு செய்திட வழிகாட்டுவது இப்பதிவின் நோக்கம்.

அஞ்சல் வாக்குச்சீட்டுகளுடன் உங்களுக்கு  அதற்கான உள் உறைகளும், படிவம் 16 ல் தேர்தல் பணிச் சான்றிதழும், படிவம் 17 ல் உறுதி மொழியும் இணைக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னம் இருக்கும் கட்டத்தில் (√) செய்து உங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.

அஞ்சல் வாக்குச்சீட்டுடன் உங்களுக்கு நான்கு படிகளில்
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் படிவம் 17 ன் நான்கு நகல்களில், ஒரு நகலில் நீங்கள் வாக்களிக்கும் கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர் தேர்தலின் வார்டு எண்ணை குறிப்பிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளை/ ஊதா நிற வாக்குச்சீட்டின் எண்ணை பதிவு செய்து நாள் இடம் ஆகியவற்றை பதிவு செய்து ஒப்பமிடவும்...

இரண்டாம் நகலில் நீங்கள் வாக்களிக்கும் ஊராட்சி மன்ற விபரத்தினை பூர்த்தி செய்து வெளிர் சிவப்பு (Pink) நிற வாக்குச்சீட்டில் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு (√) மார்க் செய்து அந்த வாக்குச்சீட்டின் எண்ணை பூர்த்தி செய்து நாள் இடம் ஆகியவற்றை பதிவு செய்து ஒப்பமிடவும்.

படிவம் 17 ன் மூன்றாம் நகலில் நீங்கள் வாக்களிக்கும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எண் விபரத்தினை பூர்த்தி செய்து பச்சை நிற (Green) வாக்குச்சீட்டில் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு (√) மார்க் செய்து அந்த வாக்குச்சீட்டின் எண்ணை பூர்த்தி செய்து நாள் இடம் ஆகியவற்றை பதிவு செய்து ஒப்பமிடவும்.

படிவம் 17 ன் மூன்றாம் நகலில் நீங்கள் வாக்களிக்கும் மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் எண் விபரத்தினை பூர்த்தி செய்து மஞ்சள் நிற (Yellow) வாக்குச்சீட்டில் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு (√) மார்க் செய்து அந்த வாக்குச்சீட்டின் எண்ணை படிவம் 17ல் பூர்த்தி செய்து நாள் இடம் ஆகியவற்றை பதிவு செய்து ஒப்பமிடவும்.

விடுதல் இன்றி முழுமையாகபடிவம் 17 னை பூர்த்தி செய்து (பொறுந்தாத பகுதிகளை அடித்து) விடவும்.

வாக்களித்த வாக்குச்சீட்டுகளை  உரிய உறைகளில் இட்டு உறைகளின் மேல் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து, உறையின் மீது ஒப்பமிட்டு  உறைகளை ஒட்டிவிடவும்.

முழுவதுமாக நிரப்பப்பட்டு உறைகளின் மீது ஒப்பமிடப்பட்ட வாக்குச்சீட்டுகளுடன், வாக்குச்சீட்டு எண்களை பூர்த்தி செய்து ஒப்பமிட்டு படிவம் 17 நான்கு நகல்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய பணிச்சான்று ஆகியவற்றை அஞ்சல் வாக்குச்சீட்டிற்கான வெளி உறையில் (Outer cover) இட்டு அந்த உறையில் உள்ள விபரங்களை  நிரப்பி தேர்தல். நடத்தும் அலுவலருக்கு வாக்கு எண்ணுகை நாளான 02-01-2020 காலை எட்டு மணிக்குள் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்...

நிரப்பப்படாத அல்லது பகுதியாக நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் உறைகளினால் வாக்குகள் செல்லாததாகும் என்பதால் படிவங்களை கவனமாக நிரப்பி வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற அழைக்கிறேன்.
~
வாழ்த்துகளுடன்,
மு. வீரகடம்பகோபு,
திண்டுக்கல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post