பணி அனுபவச் சான்றுக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் மேலொப்பம் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், டி.ஆா்.பி. உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு விண்ணப்பதாரா்களிடையே எழுந்துள்ளது.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது.
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பா் 15-ஆக நீட்டிக்கப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment