Title of the document


பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, அரசு, பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post