Title of the document


உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக, முன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். டிசம்பர் இறுதிக்குள், இரண்டு கட்டங்களாக, தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளி அரையாண்டு தேர்வுகள், டிச., 24 வரை நடக்க உள்ளன.

இதனால், பள்ளி ஆசிரியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதிலும், பள்ளிகளில் ஓட்டுப்பதிவை நடத்துவதிலும், சிக்கல் ஏற்படும். எனவே, அரையாண்டு தேர்வுகளை முன்கூட்டியே முடிப்பதற்கு, கல்வித்துறை அதிகாரிகளிடம், மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post