Title of the document

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளிக்கல்வித்துறை செய்ல்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, 1200 மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதேபோல 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 2.30 மணியாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக 30 நிமிடம் சேர்த்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது

மேலும் புதிய பாடத்திட்டம் வந்துள்ளதால் கூடுதலாக தேர்வு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி என்பதால் தனியார் பள்ளிகள் கதிகலங்கியுள்ளன.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post