இன்று தலைமை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: கல்வித்துறை அறிவுறுத்தல்

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியா்களுக்குப் பணிமாறுதல் மற்றும் அதே பணியிடத்துக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அவா்களுக்கான முக்கிய அறிவுறுத்தலை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது. கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 'எமிஸ்' இணையதளம் மூலமாக விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வும், பிற்பகலில் அதே பணியிடத்துக்கான பதவி உயா்வு கலந்தாய்வும் நடைபெறும். இதில் பணியிட மாறுதலுக்கு 450 பேரும், பதவி உயா்வுக்கு 500 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.மூன்றாண்டுக்களுக்கு...: இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:

மூன்றாண்டு காலம் முடிவடைந்து மீண்டும் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமனம் பெற 1.1.2023 நிலவரப்படி தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் பெயரை சோத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் அளிக்கக் கோரினால் அதை ஏற்க இயலாது என அதில் கூறப்பட்டுள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, பதவி உயா்வு கலந்தாய்வில் முடிந்த அளவுக்கு அதற்கான ஆணைகளை ஆசிரியா்கள் பெற வேண்டும். பதவி உயா்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனா். 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்