அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307


அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
நாகையில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் உம்பளச்சேரி பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராம்தாஸ். வயது 57. இவர் தஞ்சையில் தங்கியிருந்து தினமும் உம்பளச்சேரி அரசு மேல்நிலை பள்ளிக்கு வந்து ஆசிரியர் பணியாற்றி வந்தார்.

வழக்கம் போல இன்றும் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ராம்தாஸ் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது