Title of the document


சென்னை: நாடு முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பாடப்பிரிவுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவுக்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அல்லது நிகர்நிலைப்பல்கலைக்கழகம் அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகம் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளும் வசதியை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கும் தொலைதூர கல்வி வகுப்புகளுக்கு பிப்ரவரி மாத இறுதிக்குள்ளும் மாணவர் சேர்க்கையை முடிக்கவும், ஜூலை மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு பின்னர், மார்ச் 15, அக்டோபர் 15ம் தேதிகளில் மாணவர்கள் பட்டியலை சம்பந்தபட்ட கல்வி நிறுவனம் யுஜிசி இணையதளம் மூலம் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே ேபால் பல்கலைக்கழக மானிய குழு வெளியிடும் அறிவிப்புகளை http://www.ugc.ac.in/deb/notices.html அல்லது http://deb.ugc.ac.in/Notices ஆகிய இணையதளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post