Title of the document
Screenshot_2019-11-27-13-53-23-23
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 கல்லூரிகளுக்கும் தலா ரூ 325 கோடி ஒதுக்கப்படுகிறது.

இதில் மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் மத்திய அரசு சார்பில் 195 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த கல்லூரிகளுடன் சேர்த்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 3 கல்லூரிகள் மூலம் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கெனவே 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post