இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

Join Our KalviNews Telegram Group - Click Here
பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுவதாக ஆசிரியர்கள் கூறினர். மேலும் கோவை,திருப்பூர் மாவட்டங்களிலும் அதிக அளவிலான மாணவர்களை சேர்த்த பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் வைத்துள்ளனர்.

        அதிக இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் உபரியாக உள்ளதைப் போன்ற பொய்யான தோற்றத்தை இதன் மூலம் அதிகாரிகள் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.

வட மாவட்டங்களில் பல பள்ளிகளிலும் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. ஒரு ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை கையாளும் சூழல் உள்ளது.

எனவே இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை உண்மையாக கணக்கிட்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என டெட் தேர்வில் தேர்வு பெற்ற ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்