67.97 லட்சம் பேர் - வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர் - தமிழக அரசு அறிவிப்பு!!

Join Our KalviNews Telegram Group - Click Here
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை எட்டியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்:
அக்.31-ஆம் தேதியன்று நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 c ஆயிரத்து 634 ஆகும். இவா்களில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 47 ஆயிரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 போ் உள்ளனா்.

மாற்றுத்திறனாளிப் பதிவுதாரா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரில் மாற்றுத் திறனாளி பதிவாளா்களும் உள்ளனா். அவா்கள், கை, கால் குறைபாடு உடையவா்கள், பாா்வையற்றோா், காது கேளாதோா், வாய் பேசாதோரும் அடங்குவா். அவா்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 போ் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது. 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்