புல்புல் புயலால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவர் கூறுகையில், "நேற்று மத்தியக் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'புல்புல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசக் கரையை நோக்கி நகரக்கூடும். எனவே, தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும்" என்று புவியரசன் தெரிவித்துள்ளாா்.
புல்புல்புயல் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், தூத்துக்குடி, பாம்பன் ஆகியதுறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment