டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்?

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது
உச்சநீதிமன்றம் கெடு
உள்ளாட்சி தேர்தல் நடத்தாத தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு..


உச்சநீதிமன்றம்  : உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறதா ? உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த விரும்பவில்லையெனில், உச்சநீதிமன்றமே முன்னின்று நடத்த தயாராக இருக்கிறது.
தேர்தல் ஆணையம் :தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. டிசம்பர் 2ம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் : உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டு வருகின்றன. ஆகையால் டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும்
வழக்கறிஞர் ஜெய் சுகின் : இன்னும் 9 மாவட்டங்களில் உரிய மறுவரையறை செய்யப்படாமல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.


இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இதனை எதிர்த்து,வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிட்டு அதன் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை தற்போது மீறும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். 

அதனால் உறுதியளித்தபடி தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் தான் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Post a Comment

0 Comments