Title of the document

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் 53,789 பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர்.முதல்முறையாக கணினிவழியில் நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மொத்தம் 17 பாடங் களுக்கான தேர்வுகளுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 580 (79.57 சதவீதம்) பட்டதாரிகள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 2-வது வாரம் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post