அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்துஆராய, குழு ஏற்படுத்த வேண்டும்' என, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.
நீலகிரி மாவட்டம், மேலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள, அரசு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.இந்த கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானதால், இடிந்து விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம்,வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:
மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில், பழமையான பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய, பொறியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழு, பள்ளி கட்டடங்களின் நிலையை ஆய்வு செய்து தரும் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடிந்து விழுந்த பள்ளி கட்டடம் தொடர்பாக, பள்ளி கல்வி துறை இயக்குனர், நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment