Title of the document


அனைவருக்கும் வணக்கம். பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.

சென்ற ஆண்டு ஒரு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வினை தற்காலிகமாக மூன்றாண்டுகளுக்கு பணி துறப்பு செய்தவர்கள் மீண்டும் அந்த பட்டதாரி ஆசிரியரே வேறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 1 .1. 2019 ல் தகுதியிருப்பின் தற்போது முன்னுரிமைப் பட்டியலில் 24 .10.2019 க்குள் தங்களது பெயரைச் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல் நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண் 049969/w 2/இI/2019. நாள் 17 .10.19ல் தெரிவித்துள்ளார்கள்.


எனவே அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனவே 1.1.19ல் வேறுபாடத்தில் தகுதியுள்ள முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் உடனடியாக Panel Listல் பெயர் சேர்க்க ஏதுவாக பதவி உயர்வுக்கான முன்மொழிவுகளை (Proposal Forms) இரண்டு செட் தயார் செய்து 24.10.19க்குள் அந்தந்த CEO அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் இவ்வாண்டே செல்லலாம் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். உதாரணமாக ஒரு பட்டதாரி ஆசிரியர் சென்ற ஆண்டு பொருளியல் அல்லது வேறு எந்த பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வினை பணி துறப்பு செய்து இருந்தாலும் அந்த பாடத்திற்கு மட்டும் தான் மூன்றாண்டு களுக்கு செல்ல முடியாது. ஆனால் அந்த ஆசிரியரே வேறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று இருந்தால் இந்த பாடத்தில் இவ்வாண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்லலாம் .

New proceeding

நன்றி
பட்டதாரி ஆசிரியர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post