எமிஸ்' பதிவேற்றும் பணி அதிகரிப்பு: கற்பித்தல் பாதிக்கும் ஆபத்து

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 9092837307
அரசு பள்ளிகளில், 'எமிஸ்' இணையதள பதிவேற்றம் உள்ளிட்ட பணி அதிகரிப்பதால், கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் விபரம், ஆசிரியர் விபரம் உள்ளிட்டவை, 'எமிஸ்' எனும் கல்வி மேலாண்மை தொகுப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாணவரின் தொடர் மதிப்பீட்டு விபரம், உடனுக்குடன் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி துறையின் அனைத்து கடித போக்குவரத்தும், தற்போது இணையதளம் மூலம் நடக்கிறது.

மாணவர்களின் சேர்க்கை விபரம், நலத்திட்டம் வழங்குவது, வருகை பதிவு உள்ளிட்டவை, ஆன்லைன் முறையில் நடக்கும் நிலையில், தற்போது தொடர் மதிப்பீடு மதிப்பெண்களையும், உடனுக்குடன் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பணிக்கே, ஒரு ஆசிரியர், முழு நேர பணியாக, கணினியில் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சுமையை அதிகரித்தால், கற்பித்தல் பணியை விட்டுவிட்டு, பதிவேற்றம் மட்டுமே செய்ய வேண்டும். போதாக்குறைக்கு, எமிஸ் இணையதளம், பல நாள் செயல்படுவதில்லை. இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments