Title of the document
images%252827%2529

இந்த வருடம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை அதுவும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை என்ற அறிவிப்பு மாணவர்களையும், அரசு ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருடத்திற்கான தீபாவளி அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முதல் நாள் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்களாக விடுமுறை வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்றும், அதற்கு முன்னால் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாட்கள் என செய்தி வெளியாகியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி ஒரு நாள் என்றாலும் அதற்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுவது வாடிக்கை.

மேலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்து சென்று வருவது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதனால் இந்த தீபாவளி எப்படி அமைய போகிறதோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post