
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆடுதோறும் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 500-க்கும் மேற்பட்ட பயிற்சியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிப்ளமோ, பி.இ உள்ளிட்ட துறைகளில் பயின்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
பயிற்சிகள் வழங்கப்படும் பிரிவு : இந்தப் பயிற்சியானது பட்டப்படிப்பு தகுதி, பட்டயப்படிப்பு தகுதி என இரு பிரிவுகளாக வழங்கப்பட உள்ளது.
இதில், பட்டப்படிப்பு அளவில் 250 பேரும், டிப்ளமோ பிரிவில் 250 பேர் என மொத்தம் 500 பேர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பயிற்சி காலம் மற்றும் தொகுப்பூதியம் :-
பயிற்சிக் காலம் ஒரு வருடமாகும். இந்த காலகட்டத்தில் பொறியியல் பயின்றவர்களுக்கு மாதம் 4,984 ரூபாயும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 3,542 ரூபாயும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : வேலைவாய்ப்பு பயிற்சியில் சேருவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ அல்லது http://boat-srp.com/ என்னும் இணையதளத்தில் 'TANGEDCO' என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள் :-
வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்ட நாள் : 9 அக்டோபர் 2019
NATS Portal ஆன்லைன் பதிவு நாள் : 25 அக்டோபர் 2019
TANGEDCO-வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5 நவம்பர் 2019
சான்றிதழ் சரிபார்ப்பு நாள் : 12 நவம்பர் 2019
இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.