கனமழை - விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது