நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் 

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
net

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

இந்த தேர்வை தற்போது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு டிசம்பர் 2-ல் தொடங்கி 6-ம் தேதி வரையும், ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக் கான நெட்தேர்வு டிசம்பர் 15-ம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 11.5 லட்சம் பேர் வரை விண்ணப்பித் துள்ளனர். பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் மாணவர்கள் கடந்த அக்டோபர் 18-ம் தேதி முதல் இணையதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ள என்டிஏ ஏற்பாடு செய்திருந்தது.

திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (அக்.25) முடிவடைகிறது. மாணவர்கள் http://nta.ac.in என்ற இணைய தளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.