Title of the document


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவுக்கு, 'ஆண்ட்ராய்டு' செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில், பாட திட்ட மாற்றம், தேர்வு முறை மாற்றம் என, புதிய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்,பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என,உத்தரவிடப் பட்டது.இதை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும், தில்லுமுல்லு இல்லாமல் பதிவேடுகள் பராமரிக்கப் படவும்,ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் ஆனபின், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பது குறைந்துள்ளதாக, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இதையடுத்து, மாணவர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய் செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் தளத்தின் வாயிலாக, இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, 'மாணவர்களின் தினசரி வருகை பதிவை, தலைமை ஆசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் செயலியின் வழியாக, பதிவு செய்ய வேண்டும். 'அந்த பதிவு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்'என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post