மக்கள் மனதை வென்ற அமைச்சர் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


படம் சொல்லும் ஆயிரம் விஷயத்தை .....அமைச்சர் விஜய பாஸ்கர்..சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டையில் மண் ( மாற்றுதுணி கொண்டுவர சொல்ல நேரமாகிருக்காது) , இறங்கி வேலை செய்திருக்கிறார் , உட்கார சாதாரண ஸ்டூல் (நினைத்தால் நல்ல சேரில் நல்ல வசதியான இடத்தில் உட்கார்ந்திருக்கலாம் ), விஷயத்தை முதல்வருக்கு சொல்ல பவர்பேங்க் மாட்டிய செல்போன் ( பல நேரமாக அங்கிருப்பதால் செல்போனில் சார்ஜ் குறைந்திருக்கும் ) , இதற்கும் மேல் அனைத்து காப்பாற்றும் ஊழியர்களை விரைவில் காப்பாற்றும் படி கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொண்டார் ( அதிகாரம் செய்ய பவரும் உண்டு , அக்கறையின் வெளிபாடு ) 

நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் அமைச்சர் விஜய பாஸ்கர்....சமூக அக்கறையுள்ள மனிதனாக நீங்கள் எங்களின் மனங்களை வென்று விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் சகோ.விஜயபாஸ்கர் MLA
#Salute_MLA_VijayaBaskar

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற சம்பவம் வெளியே தெரியவந்த பின், ஓரிரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னமும் கூட அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று கிட்டத்தட்ட 60 மணி நேரமாகி விட்டது. விஜயபாஸ்கருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உடனிருந்தார்.

ஆனால், விஜயபாஸ்கர் சற்றும் ஓய்வில்லாமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, ஊடகங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது என பம்பரமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறார். நேற்று வந்த உடையை கூட மாற்றாமல் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனில் சார்ஜ் குறையாமல் இருக்க "பவர்பேங்க்" ஆகியவற்றுடன் அமர்ந்துள்ளார்.சிறுவனின் நிலை குறித்து பொது மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சரியான தகவல்களை குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தெரிவித்து வருகிறார். பல்வேறு மீட்பு படைகள் வந்தாலும் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளையும் பார்வையிட்டு வருகிறார்.


மிக முக்கியமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடங்களுக்கு பேட்டியளிக்கும் போது இப்போது வரை நம்பிக்கையை விடவில்லை அவரின் ஒவ்வொரு பேட்டியிலும் "குழந்தை பத்திரமாக மீட்கப்படுவான்" என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது அனைவருக்கும் நம்பிக்கை கொடுப்பதாகவே இருக்கிறது. அதுதான் தொலைக்காட்சியில் மீட்பு காட்சிகளை பார்ப்பவர்களுக்கும் டானிக்காகவும் இருக்கிறது.

சாதாரண ஏழை பாமரனுக்கும் அமைச்சரவை ஓடி வந்து நிற்கும் என்பதற்கு வரலாற்று பதிவு தங்கள் உழைப்பு