#PRAY FOR SURJITH # SAVE ALL SURJITH
குழந்தை நலமுடன் மீண்டு வர கடவுளை பிரார்திப்போம், நம் கண்ணீரும் பிரார்த்தனைகளும் அவனை காப்பாற்றும் என நம்புவோம் !!
நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் அடுத்தகட்டமாக , சிறுவன் விழுந்த இடத்திலிருந்து மூன்று மீட்டர் தூரத்தில் சுரங்கம் தோண்டும் பணி ரிக் இயந்திரம் மூலமாக வேகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுவரும் மிகவும் அனுபவம் மிக்க பணியாளர்கள் , நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக நேற்று காலை முதல் கிணற்றின் உள்ளே விழுந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் . தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பல்வேறு வகையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டு எடுக்க முயற்சி செய்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவனை மீட்டு எடுக்கும் செயலில் அடுத்த கட்டமாக , சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திலிருந்து 3 மீட்டர் தூரத்தில் ஒரு மீட்டர் அகலத்தில் சுரங்கம் தோண்டும் பணியானது இன்று காலை முதல் வேகமாக நடைபெற்று வருகிறத. சுரங்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரம் மூலம் இந்த சுரங்கம் தோண்டும் பணியானது செய்யப்பட்டு வருகிறது . சுரங்கம் தோன்றியவுடன் அந்த சுரங்கத்தில் தங்களின் உயிரை பணயம் வைத்து 3தீயணைப்பு வீரர்கள் இறங்க தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.