Title of the document

 JIO

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா!

ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு பின்னால் அதற்கு வசூல் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தெரிந்தும் அதில் மாட்டிக்கொள்வது தான் நமது மக்களின் பழக்கமாகும். அம்பானி சகோதரர்களின் ஜியோ நிறுவனம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முதலில் சிம் கார்டுகளை இலவசமாக கொடுத்தனர். 4G அமைப்புடன் வந்த இந்த சிம் கார்டுகளால் 4G தரம் கொண்ட மொபைல் போன்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன.
சிறிது நாட்கள் கழித்து ஜியோ நிறுவனம் தங்களது சேவைக்கு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தது. அதாவது மாதத்திற்கு ஒரு கட்டணமும், மூன்று மாதங்களுக்கு ஒரு கட்டணமும் மேலும் வருடத்திற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்தனர். இதனால் தடையில்லாத கால் பேசும் அமைப்பை கொண்டு வந்த ஜியோ நிறுவனம், தற்போது தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது இனிமேல் ஜியோ சிம்மில் இருந்து இதர நெட்வொர்க்களுக்கு கால் செய்தால் நிமிடத்திற்கு 6 பைசா வீதம் வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post