சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாள் விடுமுறை ??

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307


சீன அதிபர் - மோடி சந்திப்பு எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். இதற்காக 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும், பிரதமர் மோடியும் சென்னைக்கு வருகிறார்கள்.இதன் காரணமாக சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மாமல்லபுரமும் புதிய சாலைகளால் ரம்மியாக மாறியுள்ளது.அத்துடன் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சீன அதிபரின் வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறு நாள் (அக்டோபர் 11,12ஆம் தேதிகளில்) சென்னையில் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலை மற்றும் மகாபலிபுரம் ஓஎம்ஆர்சாலையில்போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறையாகிறது.