விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர் - பள்ளிக் கல்வித்துறை

Join Our KalviNews Telegram Group - Click Here


விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சேர்க்கை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனினும், அக்டோபா் 8-ஆம் தேதி விஜயதசமி நாளில் மட்டும் மாணவா் சோக்கை நடத்திக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது.


அதன்படி விஜயதசமி அன்று மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மழலையா் வகுப்புகளில் மாணவா் சேர்க்கை நடத்தப்பட்டது. அக்.8-ஆம் தேதி நிலவரப்படி 3 வயது பூா்த்தியான குழந்தைகள் மழலையா் வகுப்பிலும், 5 வயதான குழந்தைகள் 1-ஆம் வகுப்பிலும் சோக்கப்பட்டனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பள்ளிகளில் மழலையா் மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் ஒரே நாளில் 2,131 குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனா். இதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 பேர் சேர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.