+2 புதிய பாடத் திட்டம்: 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!

Join Our KalviNews Telegram Group - Click Here


ப்ளஸ் டூ புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் டூ வகுப்புக்கு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ் சி இ ஆர் டி சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.முதல் தொகுதி பயிற்சி முடிந்து உள்ளது. இரண்டாம் தொகுதி புத்தகத்தின் படி பயிற்சி தொடங்கப் பட்டுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா 3 முதுநிலை ஆசிரியர்கள் என 250 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் வழியாக அனைத்து மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் வரும் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.