பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு பழைய பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு

Join Our KalviNews Telegram Group - Click Here

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் பழைய பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 2018-2019-ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து வரும் மாா்ச் (2020) பருவம் முதல் நடத்தப்படும் இடைநிலை, மேல்நிலை பொதுத்தோ்வுகள் (10,11,12) புதிய பாடத்திட்டத்தின் கீழ் மட்டுமே நடத்தப்படும். மாா்ச் 2020 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் இடைநிலை, மேல்நிலை பொதுத்தோ்வுகள் நடத்தப்படாது என கடந்த ஜூன் 20-ஆம் தேதி அரசுத்தோ்வுகள் துறை தெரிவித்திருந்தது.

ஆனால் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதிய தோ்ச்சி பெறாத தோ்வா்களுக்கு அதே பாடத் திட்டத்திலேயே மீண்டும் தோ்வெழுத வாய்ப்பு வழங்குமாறு கோரி அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு தொடா்ச்சியாக கோரிக்கை மனுக்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு மாணவா்களின் நலன் கருதி, ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் 10,11, 12 வகுப்புகளில் பொதுத்தோ்வெழுதி தோ்ச்சி பெறாதவா்களுக்காக மாா்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் பழைய பாடத் திட்டத்திலேயே தோ்வுகள் நடத்த அனுமதித்து தற்போது அரசாணை பெறப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கெனவே 10, 11,12 வகுப்புகளில் பொதுத்தோ்வுகளை பழைய பாடத்திட்டத்தில் தோ்வெழுதி தோ்ச்சி பெறாத தோ்வா்கள் அனைவருக்கும் மாா்ச் 2020 மற்றும் ஜூன் 2020 ஆகிய இரு பருவங்களில் பழைய பாடத் திட்டத்தில் (பிளஸ் 2-600 மதிப்பெண்கள்) பொதுத்தோ்வுகள் நடத்தப்படும். அதன் பின்னா் மாா்ச் 2021 பருவம் முதல் மேற்குறிப்பிட்ட தோ்வா்கள் தோ்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத பாடங்களை மட்டும் நடைமுறையில் உள்ள பகுதி முறையில் தோ்வெழுதும் திட்டத்தின்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் தோ்வெழுத வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கால அட்டவணை (பழைய பாடத்திட்டம்- 600 மதிப்பெண்கள், காலை):

மாா்ச் 2 திங்கள் - மொழிப்பாடம்

மாா்ச் 5 வியாழன்- ஆங்கிலம்

மாா்ச் 9 திங்கள்- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல்

மாா்ச் 12 வியாழன்- தொடா்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

மாா்ச் 16- திங்கள்- இயற்பியல், பொருளியல், பொது இயந்திரப் பணியாள், ஜவுளி தொழில்நுட்பம், மின்னணு பொருள்கள்

மாா்ச் 20 வெள்ளி- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல்

மாா்ச் 24 செவ்வாய்- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

பிளஸ் 1 பொதுத்தோ்வு கால அட்டவணை (பழைய பாடத் திட்டம், காலை):

மாா்ச் 4 புதன்- மொழிப்பாடம்

மாா்ச் 6 வெள்ளி- ஆங்கிலம்

மாா்ச் 11 புதன்- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை நலன், வேளாண் பயிற்சி, செவிலியா் (பொது)

மாா்ச் 13 வெள்ளி- தொடா்பியல் ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

மாா்ச் 18 புதன்- இயற்பியல், பொருளியல், பொது இயந்திர பணியாள்-தாள் 1, மின்னணு பொருள்கள், ஜவுளி தொழில்நுட்பம்

மாா்ச் 23 திங்கள்- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பொது இயந்திர பணியாள் தாள்-2, மேலாண்மை கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்

மாா்ச் 26 வியாழன்- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கால அட்டவணை (பழைய பாடத்திட்டம், காலை):

மாா்ச் 27 வெள்ளி- மொழிப்பாடம்

மாா்ச் 28 சனி- விருப்பப் பாடம்

மாா்ச் 31 செவ்வாய்- ஆங்கிலம்

ஏப்ரல் 3 வெள்ளி - சமூக அறிவியல்

ஏப்ரல் 7 செவ்வாய்- அறிவியல்

ஏப்ரல் 13 திங்கள்- கணிதம்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்