School morning Prayer Activities - 17-09-2019

Join Our KalviNews Telegram Group - Click Here
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.09.19


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது  பிறந்தநாள்
திருக்குறள்

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம்:

அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

பழமொழி

Malice hurts itself most.

 கெடுவான் கேடு நினைப்பான்.

இரண்டொழுக்க பண்புள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

காலத்தை வீணாக்காமல் கடமையைச் செய்தால் கடலளவு கஷ்டமும் காலடியில் காணாமல் போகும் .

----- இறையன்பு அவர்கள்

பொது அறிவு

1. திருக்குறள் எந்த இந்திய மொழியில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது?

மலையாளம்

2.பழங்குடி மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?

மத்திய பிரதேசம்

English words & meanings

Quantum - a discrete quantity of energy.

குவாண்டம். இயற்பியலில் ஒரு அளவை

Quality - a distinctive character or a standard one

தரமான

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயம் உஷ்ணத்தை தரக்கூடியது, உணவை எளிதில் செரிக்க வைக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது, குடற்புழு அகற்றியாகவும் பயன்படுகிறது .

Some important  abbreviations for students

* JO = Jordan 

* JP = Japan

நீதிக்கதை

வைஷாலியின் பொய்

ஒரு ஊரில் ஜானகி ஆன்ட்டி இருந்தார். அவருக்கு ரமேஷ், விக்கி, வினோத், வைஷாலி என்று நான்கு குழந்தைகள். ஒருமுறை ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள். பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. வைஷாலி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையால் ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது. ஆன்ட்டி ஒரு ப்ளம்ஸ் பழத்தை யாராவது சாப்பிட்டீர்களா? என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள். எல்லோரும் இல்லை என்று சொன்னார்கள். வைஷாலியும் அவர்களோடு சேர்ந்து நான் சாப்பிடவில்லை என்று சொன்னாள்.

ஓகே, யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும் என்றாள் ஜானகி ஆன்ட்டி. வைஷாலி பயந்துபோய், இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன் என்று கூறி அழத் தொடங்கினாள். பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்று வைஷாலியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

நீதி :

பொய் சொன்னால் ஒரு நாள் உண்மை தெரிந்துவிடும்.

இன்றைய செய்திகள்

17.09.2019

* தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் 10-ஆம் வகுப்பின் பொதுத்தேர்வு அட்டவணையில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

* எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது.

* நுரையீரல் புற்றுநோய் வகையைத் துல்லியமாக அறிய உதவும் கிரையோ பயாப்ஸி கருவி: மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகம்.

* வியட்நாம் ஓபன் பிடபிள்யூஎப் டூர் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Today's Headlines

🌸As the langue paper is merged into single the old public exam time table is altered and a new one is released by School Education Department.

🌸As the result of attack on the oil mine by pilot less flight Saudi Arabia stopped 50% of it's oil production.

🌸To find out accurately about the lung cancer an instrument Chryo Biopsy is introduced in Madurai Government Hospital.

🌸In Vietnam open FWF tour Super100 batmiton men singles match Indian Player Saurav Varma won the Championship.

🌸  International Cricket Council (ICC) Test Rankings: Virat Kohli holds on to second spot, Steve Smith retains number one position.

Prepared by

Covai women ICT_ போதிமரம்

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்