Title of the document

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ற்கான தேர்வுகள் வருகின்ற 27.09.2019,  28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தமிழகமெங்கும் 154 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் சுமார் ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் நபர்கள் தேர்வு எழுத உள்ளனார்.அனைத்து தேர்வுகளும் அனைத்து தேர்வுகளும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு கணினி வழித் தேர்வுகளான ( CBT) மேற்கொள்ளப்பட உள்ளது.நாளது வரை ஒரு இலட்சத்து மூன்றாயிரம் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.பதிவிறக்கம் செய்துள்ள தேர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் பயிற்சித் தேர்வினை முயற்சித்து வருகின்றனர்.

  கணினி வழித்தேர்வுகளைப் பொறுத்தவரை தேர்விற்கான வினாக்கள் அவரவர்களுக்கென்று தேர்வுமையத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கணினியில் வரிசைக்கிரமமாக 1 லிருந்து 150 வினாக்களும் கணினி திரையில் வெளியிடப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு வினாவாகவோ , வரிசையாகவோ அல்லது முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டுள்ளது.இறுதியாக உறுதி செய்தபின் விடைக்குறிப்பினை பதிவேற்றம் செய்திடவும், முழுத்தேர்வும் முடிந்தபின் இறுதியாக அனைத்து வினாக்களுக்குரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post