ஆசிரியர் தகுதித்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையனின் புதிய அறிவிப்பு

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முன்னரே திடீரென ஆசிரியர்கள் வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வெயிட்டேஜ் முறை சரிதான் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கான பணி நியமனம் கேள்விக்குறியானது

இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைக்காக காத்திருந்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.