Title of the document

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் மாணவிகளை மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்ய வேண்டும். 

தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் குறைந்தபட்சம் ஒன்றரை மணி (90 நிமிஷங்கள்) நேரம் வீதம் வாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும். கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பதுடன், மாணவிகளுக்கு பேரீச்சம் பழம் உட்பட ஊட்டச்சத்து பொருள்களும் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post