முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான கணினி வழித் தேர்வு: செப். 27 முதல் 29 வரை நடைபெறுகிறது - விதிமுறைகளைக் கூறும் தேர்வுத்துறை

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணிக்கான கணினி வழித் தேர்வு, செப்.27 முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 2018-19 -ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணிக்கான கணினி வழித் தேர்வு, செப்.27 முதல் 29 வரை தினமும் , காலை , மாலை வேளைகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு, www.trb.tn.nic.in எனும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களது user id மற்றும் கடவுச் சொல் (password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அத்துடன் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த அசல் புகைப்படத்துடன் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். தேர்வு நாளன்று முற்பகல் தேர்வுக்கு 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்துக்குத் தேர்வர்கள் வர வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்கள் மூலம் தேர்வர்கள் பயிற்சி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments