முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இன்றும் நாளையும் தொடர்கிறது - சில இடங்களில் சர்வர் கோளாறு!

Join Our KalviNews Telegram Group - Click Here

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று துவங்கியது. சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின் தடை ஏற்பட்டது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 பதவிகளை நிரப்புவதற்கான போட்டி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படுகிறது. 1.85 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த தேர்வு நேற்று துவங்கியது. தேர்வர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுகணினி வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் காலை மற்றும் பிற்பகலில் தமிழகம் முழுவதும் 154 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆடை மற்றும் ஆபரண கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.முதல் நாளான நேற்று சில தேர்வு மையங்களில் மின் தடை மற்றும் கணினியின் 'சர்வர்' கோளாறு ஏற்பட்டது. அந்த இடங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வு எழுதாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்