இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் ஆணை குளறுபடியால் நிறுத்தி வைத்தது கல்வித்துறை

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கடந்த 30ம் தேதி நடந்தது.இதற்கான விதிமுறைகளில் மாவட்டங்களுக்கு மாவட்டம் வித்தியாசம் காட்டப்படுவதாகவும் இதனால் மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும் பல பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

பணி நிரவல் உத்தரவுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி உட்பட்ட ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன இந்நிலையில் இந்தபணி நிரவலில் ஆணை பெற்றவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் உத்தரவை நிறுத்தி வைத்தும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.