அங்கீகாரமற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி இல்லை!

Join Our KalviNews Telegram Group - Click Here

அங்கீகாரமற்ற பள்ளிகளில் படித்துவரும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டங்கள் வாரியாக உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு மேல்நிலை பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல், அந்த பள்ளிகள் இணைக்கப்பட வேண்டிய தேர்வு மையம் மற்றும் இணைப்புப் பள்ளிகள் மாற்றம் குறித்த விவரங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் dgef3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்டங்களில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகளின் விவரத்தை ஆராய்ந்து அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கல்வியாண்டில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 2020 மார்ச் மாதம் நடைபெறும் மேல்நிலை பொதுத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இதன் விவரங்களை சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை மூலம் தெரிவித்து முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்