பின்லாந்து கல்விமுறை - தமிழ்நாடு கல்விமுறை சில வினாக்கள்!!

பின்லாந்தில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் எவ்வளவு?

ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் கவனித்து பணி புரிகிறாரா?

25% மாணவர்களை அரசு செலவில் நூறுகோடி கொடுத்து அரசே அரசு பள்ளிகளை அழிக்கும் அவலம் அங்கு நடக்கிறதா?

ஆசிரியரின் கற்பித்தல் திறனை சிதைக்கும் 53 பதிவேடுகளை பராமரிக்க சொல்லும் பயனற்ற ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா?

கற்பித்தல் தவிர வேறு என்ன பணிகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது?

ஒரே கல்வித்தகுதி ஒரே வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு வெவ்வேறு விதமான சம்பளம் வழங்கப்படுகிறதா?

90,000 ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க வேண்டுமா? போன் இல்லாத ஆசிரியர் யாராவது இருக்கிறார்களா? இதுபோன்ற பயனற்ற செலவு செய்யப்படுகிறதா?

அரசின் பட்ஜெட்டில் கல்விக்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது?

அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த திட்டமிடாமல் திருப்பி அனுப்புகிறார்களா?

இன்னும் நிறைய விடைதெரியாத வினாக்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சரி செய்யாமல் பின்லாந்தை விட நாம் எப்படி சிறந்த கல்வியை வழங்க முடியும்?

ஆசிரியர் சமுதாயம் இன்றைக்ககு மிகுந்த மன உளைச்சலில் பணிபுரிகிறது. இதன் விளைவுகள் கற்பித்தலில் எதிரொலிக்கத்தானே செய்யும். ஆசிரியர்தினம் கொண்டாடும் மனநிலையில் ஆசிரியர்கள் இல்லை என்பதே உண்மை.!!