Title of the document

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. அத்துடன் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் கூறப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 320 ஆசிரியர்களைக் கொண்டு, Etoos India மூலம் 413 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரீனிங் தேர்வு நடத்தப்படும் என்றும் ஸ்க்ரீனிங் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் 18,000 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். காலை 9.30 மணி முதல் 12.40 வரையிலும், பிற்பகல் 1.10 மணி முதல் மாலை 4.20 மணி வரை நடைபெறும் என்றும் இந்த பயிற்சி வகுப்பு வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post