மாணவர்களை அடிக்கக்கூடாது என்பதால் கற்றல் திறன் குறைந்துவிட்டதா? #VikatanSurvey

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை குறித்த சர்வே!

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டிக்கொண்டு சண்டைப் போட்டுக்கொண்டிருந்த வீடியோ வைரலாகப் பரவியது. அதைப் பார்த்தவர்கள் அந்த மாணவர்களைத் திட்டித்தீர்த்தனர். சிலர் அம்மாணவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பைக் குறை சொன்னார்கள். இன்னும் சிலரோ பள்ளிகளில் அடித்து, கண்டிப்போடு வளர்க்காததே பெரியவர்களான பிறகு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் சொன்னார்கள்.

மாணவர்கள்
கல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அதனையொட்டி கடந்த பத்தாண்டுகளாக பள்ளியில் மாணவர்களை, ஆசிரியர் அடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து படிப்புக்கே முழுக்குப் போட்டவர்கள் ஏராளம். ஆனால், இந்தச் சட்டம் வந்தபிறகு அந்த நிலை மாறியிருக்கிறது என்றும் கல்வியாளர்கள் சொல்லிவருகின்றனர். ஆனபோதும் பொதுமக்கள் பார்வையில் ஆசிரியர், மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த சர்வே

Click Here - To Vote in #VikatanSurvey

Post a Comment

0 Comments