Title of the document


*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

30-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் - 736*

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
 நாடென்ப நாட்டின் தலை.

✍மு.வ உரை:

பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

✍கருணாநிதி  உரை:

எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.

✍சாலமன் பாப்பையா உரை:

பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

புண்ணியமே சுக வாழ்விற்கு விதை போன்றது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  நட்டு வையுங்கள்.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன்இ உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?*

நாம் அறிந்த விளக்கம் :

உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன் முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டவா போகிறான் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

உடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*Important  Words*

 Farmer  உழவர், விவசாயி

 Ferry Man  படகோட்டி

 Film Star  சினிமா நட்சத்திரம்

 Fisher Man  மீனவர்

 Gardener  தோட்டக்காரர்

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. இந்தியாவில் மத்திய அரிசி மையம் எங்குள்ளது?

*கொல்கத்தா*

2.கடல் மட்டத்திலிருந்து (Altitude) உயரத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?

*ஆல்டி மீட்டர்*

📫📫📫📫📫📫📫📫

*விடுகதை*

1. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?

*இரகசியம்*

2. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

*உப்பு*

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பத்தாவது பாஸ்*

ரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான்.

ஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

ரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

என்னா தம்பி மேல படிக்கப் போறீயா? நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா? என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர்.

நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர்.

இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

நீதி :

பொய் சொல்லி பெற்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*தொகுப்பு*

T. தென்னரசு,
TN டிஜிட்டல் டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

🔮வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் துணை முதல் அமைச்சர்.

🔮ஹாங்காங்கில் சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிப்பு.

🔮லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

🔮லடாக்கில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்கப்படும்: மத்திய அரசு.

🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.

🔮RBI says lack of domestic demand affecting ‘animal spirits’ of economy.

🔮Gujarat coast put on high alert after inputs of possible entry by Pak commandos.

🔮Madras High Court pulls up TN government over helmet rule implementation.

🔮Madurai girl bags educational tour to NASA.

🔮Medals won by sportspersons reflect India's new passion: Narendra Modi.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post