கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சிப் பெட்டியை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்

அனைவருக்கும் வணக்கம். வரும் (26.08.19) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது* *கல்வித்துறைக்கென்று பிரத்யேகமாக* *உருவாக்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியினைத்(200) தொடங்கிவைக்க இருக்கிறார்.அந்நிகழ்ச்சியினை மாணவர்கள் அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக தங்கள் பள்ளிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் மாற்று ஏற்பாடாக Desk top computer,அல்லது மடிக்கணிணி வாயிலாகவாவது மாணவர்கள் காணும் வசதியினை ஏற்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆணையின்படி.