Title of the document

டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்குகிறது.

சிபிஎஸ்இ சார்பில் 13வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று (ஆகஸ்ட் 19, 2019) தொடங்கி செப்டம்பர் 18ஆம் தேதி முடிகிறது

http://ctet.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இந்தத் தேர்வு 20 மொழிகளில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் தேர்ச்சிக்கான மதிப்பு 7 ஆண்டுகளாகும். தேர்ச்சி பெற்றவர் ஏழு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியில் சேர முடியும்.

இரண்டு தாள்களாக நடக்கும் இத்தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆகலாம். இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்றால், 6 முதல் 8 வகுப்புகளுக்கும் ஆசிரியராக முடியும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post