பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் புகைப்படம்: இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில், பள்ளியின் முகப்பு தோற்றம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய, கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளன

பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

அடுத்தகட்டமாக, பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள் முழுவதையும் சரிபார்க்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எமிஸ் பதிவில், பள்ளியின் பெயர், பிரிவு, தொடர்பு எண், தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும்

தலைமையாசிரியர்கள், அவர்களின் எமிஸ் பதிவுக்கான நுழைவு அடையாள எண் மற்றும் கடவு எண்களை அறிந்திருக்கவும், எவ்வாறு எமிஸ் பதிவில் நுழைவதையும் தெரிந்திருக்க வேண்டும்.கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி இதனை சோதனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது

 பள்ளிகளின் விபரங்களை, எமிஸ் பதிவில், தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எமிஸ் மூலமாகவே, ஆசிரியர்களின் வருகையும் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்களின் விபரங்களும், இதில் சரிபார்க்கப்பட வேண்டும். கால அட்ட வணை வடிவமைக்க வேண்டும்

 சரிபார்த்தல் பணிகளை தொடர்ந்து, பள்ளியின் பெயரோடு காட்சியளிக்கும் முகப்புத்தோற்றம், பள்ளிகளில் உள்ள கழிவறைகளின் நிலை, சுற்றுச்சுவர், 'ஸ்மார்ட் வகுப்பு', நுாலகம், ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளின் படங்களை, பதிவேற்றம் செய்ய வேண்டும்

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தினர், பள்ளிகளில் இதனை முறையாக செயல்படுத்த, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கல்வித்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments