Title of the document



செழிக்கும் நற்கல்வியால் தழைக்கும் நம் தமிழகம்
கல்வியுகப் புரட்சியாய்
வருகுது கல்வித்தொலைக்காட்சி

வளர்ச்சி ஒன்றை மூச்சாக்கி
பாடங்கள் மாறுது
கல்வி ஒன்றை கையிலெடுத்து அறிவிங்கே படங்களாக ஓடுது

தித்திக்கும் திருக்குறளும் திகட்டாத கதைபலவும் குவியலாக கிடக்குது
ஏடு தாண்டி கணினி போதாதென கல்வி தொலைக்காட்சி கனவுகளைக் கூட்டுது

பொம்மலாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டமென பாரம்பரியம் திரும்புது
சின்னச்சிறு குழந்தைகளும் திரையில் வர தித்தித்துப் போகுது

வெற்றி பெற வழிபலவும் காட்டி
விஞ்ஞானம் மெய்ஞானம் ஊட்டி
கட்டிக்கரும்பாக வருகுது கல்வித் தொலைக்காட்சி
இனி கனவெல்லாம் நிறைவேறும் வேறென்ன வேண்டும் சாட்சி

பலதிட்டம் போட்டே தான் கல்விக் காக்கிறது நம் அரசு
பலபள்ளி இருந்தாலும் அரசுப்பள்ளி உயர்வென்றே கொட்டுது வெற்றி முரசு

பிள்ளைகளே
களித்திடுங்கள் கற்றிடுங்கள்
அறியாமை அகலட்டும்
இருள் நீங்கி புத்தொளிதான் பாரெங்கும் பரவட்டும்

கதையுண்டு கற்கண்டு சுவையுண்டு களித்திடுங்கள் தினம் கண்டு

ஆசான்கள் பாடத்தோடு பாடல்பாட
சேதி பல கொண்டு வருதே இத்தொலைக்காட்சி
இனிக்க இனிக்க கற்பீர்கள் அதுவே சாட்சி

கோடிமலர் தூவி அனைவரும் வரவேற்போம்
கல்வி ஒன்றே மாற்றம் தரும் முழுதாய் அதைக் கற்போம்

இது நம்ம தொலைக்காட்சி
அதுதான் நம்ம கல்வித்தொலைக்காட்சி
அகிலமெங்கும் பரவட்டும் அதன் ஒப்புயர்வற்ற மாட்சி


சீனி.தனஞ்செழியன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post