இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆக.30-இல் இடமாறுதல்

Join Our KalviNews Telegram Group - Click Here

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆக.30-ஆம் தேதி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதன்படி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் அடிப்படையில் வரும் 30-ஆம் தேதி "ஆன்லைன்' வழியில் இடமாறுதல் செய்ய தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த இடமாறுதலை முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்