Title of the document


பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும், 26ம் தேதி துவக்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையில், பாட திட்டம், பொது தேர்வு மற்றும் பாட பிரிவுகளில் மாற்றம், ரேங்கிங் முறை ரத்து, தேர்வு எண்ணிக்கை குறைப்பு,பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் என, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள் வழியே மட்டுமின்றி, டிஜிட்டல் வழியிலும், வீடியோ கான்பரன்ஸ் வழியாகவும், பாடங்கள் நடத்தும் புதியதிட்டத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.அதன்படி, பள்ளி கல்விநிகழ்ச்சிகளையும், பாடங்களையும் ஒளிபரப்ப, கல்வி,'டிவி' என்ற தொலைக்காட்சி அறிமுகமாகிறது. இதற்கானபூர்வாங்க பணிகள், ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், 26ம் தேதி முதல், ஒளிபரப்பு துவங்க உள்ளது.

கல்வி, 'டிவி'யை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைக்க உள்ளார். இந்த, 'டிவி'க்கு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஸ்டுடியோ அமைக்கப்பட்டு உள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post