தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திடீர் மாற்றம்.. ராமேஸ்வர முருகனுக்கு பதில் கண்ணப்பன் ஏன்?

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பனை பள்ளிகல்வித்துறை இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த ராமேஸ்வர முருகன் மெட்ரிக் பள்ளி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பனை பள்ளிகல்வித்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுத்தேர்வுகள் துறை இயக்குநராக வசுந்தரா தேவி பணி ஓய்வு பெற்றார். இதன் காரணமாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த உஷாராணி, அரசுத்தேர்வுகள் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.அதே போல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் பழனிச்சாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டார்.இதேபோல் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் லதா தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த ராமேஸ்வர முருகன் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பனை பள்ளிகல்வித்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இது நிர்வாக ரீதியான இடமாற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால் அண்மைக்காலமாக பள்ளி கல்வித்துறையின் உத்தரவுகள் பொதுவெளியில் சர்ச்சைக்குள்ளாகி வந்ததால் ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. இதனிடையே மெட்ரிக் பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ள ராமேஸ்வர முருகனுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments